திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார்!

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி (71) உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு நா.புகழேந்தி வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் நேற்று விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்பொழுது அவருக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டு மேடையிலேயே மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News