சென்னை உட்பட தமிழகம் முழுவதும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடை இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் திமுக மத்திய இணை அமைச்சரும், தற்போதிய நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சென்று சோதனை நடத்தி வருக்கின்றனர்.
சென்னை தி.நகரில் உள்ள அவருடைய அலுவகம், குரோம்பேட்டையில் உள்ள வீடு மற்றும் அண்ணா நகர் பிரபல ஐஏஎஸ் பயிற்சி மையம், பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரி உட்பட பல்வேறு இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.