“நான் மட்டும் தான் பண்றேன்” – திமுக எம்.பி.யின் அதிர்ச்சி வீடியோ வைரல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைத்ததில் இருந்து, தங்களது கட்சியினரை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும், ஆங்காங்கே, தவறுகள் நடந்துக் கொண்டு தான் வருகின்றனர்.

அந்த வகையில், திமுகவின் மாநிலங்களவை எம்.பியான KRN ராஜேஷ்குமார் பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், நான் ஒருத்தன் தான் கட்சிக்காரங்கள கூப்பிட்டு மணல் அள்ளுங்கனு சொன்னேன். வேறு எந்த மாவட்ட செயலாளரும் கட்சிக்காரங்கள மணல் அள்ளுனு சொன்னதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இவர் இந்த வீடியோவில் இவ்வாறு பேசியிருப்பது, அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்…