Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

திமுக எம்பி திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல் – கார் கண்ணாடி உடைப்பு

அரசியல்

திமுக எம்பி திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல் – கார் கண்ணாடி உடைப்பு

திருச்சியில் உள்ள திமுக எம்பி திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.

திருச்சி சிவா வீடு அமைந்துள்ள பகுதியில் புதிய விளையாட்டு திடல் திறக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் நேரு திறந்து வைத்தார். அதில் திறப்பு விழாவுக்கான கல்வெட்டில் திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை. இதற்கு திருச்சி சிவா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு பதிலடியாக அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீட்டை தாக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top