சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் பேருந்து நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கு பின்னர் திமுக முன்னாள் கவுன்சிலர் கருனாகரன் மற்றும் மண்டல குழு தலைவர் காமராஜ் ஆகியோர் பழுதடைந்த முடிச்சூர் சாலையை ஏன் சரி செய்யவில்லை என நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் வசந்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர் எரிவாயு பைப் லைன் பணிகளால் சாலை சீரமைக்கும் பணி தாமதமாவதாக கூறியபோது, எரி வாயு முக்கியமா சாலை முக்கியமா, எவன் பனம் கொடுத்தாலும் அங்கு போய்விடுவியா என மண்டல தலைவர் காமராஜ் அதிகாரியை கேட்டபோது ஏன் நீங்கள் வாங்கலியா என அதிகாரி திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த திமுகவினர் அவரை அவதூறான வார்த்தைகளில் திட்டி தாக்க முயன்றனர்.
பின்னர் காவல்துறையினர் அவர்களை சமாதனம் செய்து நெடுஞ்சாலை துறை அதிகாரியை மீட்டு சென்றனர். இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.