விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் அ.சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
இதுவரை 9 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. 9-வது சுற்றின் முடிவில் திமுக 57 483 வாக்குகளும், பாமக 24,130 வாக்குகளும், நாதக 4704 வாக்குகளும் பெற்றுள்ளது. நோட்டாவில் 394 வாக்குகள் பதிவாகியுள்ளது. திமுக 33,353 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
திமுக தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதால் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.