விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,169 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை (ஜூலை 13) இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெறுகிறது.
இந்நிலையில், இறுதிச் சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,23,195 வாக்குகள் பெற்று 67, 169 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.
பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,026 வாக்குகளும, நாதக வேட்பாளர் பொ.அபிநயா 10,479 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 852 வாக்குகள் கிடைத்துள்ளன.
இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 27 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.