ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுக இளைஞர்: தேர்தல் பறக்கும் படையிடம் பிடித்து கொடுத்த பொதுமக்கள்!

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் மக்களிடையே வாக்கு சேகரிக்க தினந்தோறும் வீதி வீதியாக சென்று பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, நேற்றிரவு கோவை துடியலூர், சுப்பிரமணியம் பாளையத்திலுள்ள, 15-வது வார்டு பொது மக்களுக்கு தி.மு.க வினர் பணம் கொண்டிருந்துள்ளனர். அப்போது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊர்மக்கள், பணம் கொடுத்துக்கொண்டிருந்த ஒருவரை பிடித்தனர். கூட வந்த இரண்டு பேர் தப்பினர். பிடிபட்டவரிடம் ஊர்மக்கள் விசாரித்ததில் தனது பெயர் மனோஜ் ( 23) எனவும், திமுகவைச் சேர்ந்த சம்பத் ஓட்டுக்கு பணமளிக்க சொன்னதால், வந்து பணம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மனோஜை தூடியலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக, பணம் கொடுக்க வைத்திருந்த 42, 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். துடியலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News