இஸ்ரேல் நாட்டிற்கும், ஹமாஸ் என்ற தீவிரவாத அமைப்புக்கும் இடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு போர் தொடங்கியது. இந்த போர், இரண்டாம் உலகப் போருக்கு காரணமாக அமைந்துவிடக் கூடாது என்று, உலக நாடுகள் பலவும், இதனை தடுத்து நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.
இதற்கிடையே, அமெரிக்காவும், இஸ்ரேல் நாட்டிற்கு ஆயுதங்கள் வழங்குவதை தடுத்து நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில், குடியரசு கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹம், NBC நியூஸ் என்ற ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், இரண்டாம் உலகப் போரை நிறுத்துவதற்காக, ஜப்பான் மீது அமெரிக்கா அனுகுண்டு வீசியது சரியான முடிவு என்றும், இதேபோல் இஸ்ரேல் நாட்டிற்கும் வெடிகுண்டுகளை கொடுத்து, போரை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஒரு யூத நாடாக வாழ்வதற்கு, இஸ்ரேல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “காஸாவின் சாதாரண குடிமக்கள் உயிரிழப்பதை, நிச்சயம் குறைக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்.
நீண்ட காலமாக, ஹமாஸ் அமைப்பு தங்களது சொந்த மக்களை, மனித கவசமாக பயன்படுத்துகிறது. குடிமக்களை மிகவும் அப்பட்டமான முறையில் ஆபத்தில் வைக்கும் எதிரியை, வரலாற்றில் நான் பார்த்ததே கிடையாது” என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில், அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், மிகவும் ஆபத்தான 3000 ஆயிரம் வெடிகுண்டுகளை, இஸ்ரேல் நாட்டிற்கு கொடுப்பதை, நிறுத்தி வைத்திருந்தார். மேலும், லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வாழும், காசாவின் ரஃபா பகுதியில், இஸ்ரேல் தாக்குதுல் நடத்தினால், ஆயுதங்கள் வழங்குவது நிறுத்தப்படும் என்றும் பைடன் கூறியிருந்தார்.
இவரது இந்த நடவடிக்கைக்கு காரணம் என்னவென்றால், இஸ்ரேல் – ஹமாஸ் போரை எதிர்த்து, ஜனநாயகவாதிகள், அமெரிக்காவில் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.