தேவர் மகன் படத்தில் ரேவதிக்கு பதிலாக நடிக்க இருந்தது இவர்தானாம்..!

1992 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் தேவர் மகன். இத்திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை கமல்ஹாசன் ஏழு நாட்களுக்குள் எழுதி முடித்தார்.

இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரேவதி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

cinema news in tamil

இப்படத்தில் கமலுக்கு மனைவியாக ரேவதி நடித்திருப்பார். ரேவதி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு நடிகை மீனாவுக்கு கிடைத்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அவரால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை நடிகை மீனா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.