Connect with us

Raj News Tamil

துணையின் Ex பற்றி வெறித்தனமாக தேடுகிறீர்களா? – உங்களுக்கு ரெபெக்கா Syndrome பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்?

உலகம்

துணையின் Ex பற்றி வெறித்தனமாக தேடுகிறீர்களா? – உங்களுக்கு ரெபெக்கா Syndrome பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்?

சமூக வலைதளங்கள் வளர்ந்த பிறகு, நாம் அனைவரும் மற்றவர்களின் வாழ்க்கையில் நடப்பது குறித்து தெரிந்துக் கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகிறோம். ஆனால், சில சமயங்களில் இது மோசமான நிலைக்கு நம்மை கொண்டு சென்றுவிடும்.

குறிப்பாக, நமது வாழ்க்கை துணையின் முன்னாள் காதலன் அல்லது காதலி குறித்து, நாம் வெறித்தனமாக தேட முயலும்போது, உறவுகளில் சில சிக்கல்களையும் நமக்கு ஏற்படுத்திவிடும்.

ஆம், நம்மில் சிலர், தங்களது துணைகளின் முன்னாள் காதலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் தேட முயற்சிக்கிறார்கள். மேலும், அந்த முன்னாள் காதலர்கள், நமது துணையுடன் ஒன்றாக இருந்த புகைப்படங்களை தேடி எடுப்பதையும், அவர்கள் தினந்தோற வாழ்வில் என்ன செய்கிறார்கள் என்பதையும், உற்றுநோக்கி வருகிறார்கள்.

இவ்வாறு செய்யும் நபர்கள், ரெபெக்கா Syndrome என்ற நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து தற்போது விரிவாக பார்க்கலாம். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மனநல மருத்துவர் டரியன் லீடர், Rebecca syndrome என்ற புதிய சொற்றொடரை உருவாக்கியுள்ளார்.

இந்த நிலையால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், என்ன செய்ய வேண்டும்?

பழைய நினைவுகளில் இருந்து சற்று தள்ளி இருக்க வேண்டும். பழைய நினைவுகள் அனைத்தையும் புதைத்து விடுங்கள். ஏனென்றால், அது உங்களுடைய புதிய உறவு மற்றும் மனநலத்தை சீரிழித்துக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக, உங்களது செல்போன் மற்றும் சமூக வலைதளக் கணக்குகளில் இருந்து சற்று தள்ளியே இருங்கள்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top