Connect with us

Raj News Tamil

குழந்தைகள் நல மருத்துவமனையில் தீ விபத்து.. உயிரிழந்த 7 பச்சிளங் குழந்தைகள்.. காரணம் இதுதான்..

இந்தியா

குழந்தைகள் நல மருத்துவமனையில் தீ விபத்து.. உயிரிழந்த 7 பச்சிளங் குழந்தைகள்.. காரணம் இதுதான்..

டெல்லியில் உள்ள விவேக் விஹார் பகுதியில் குழந்தைகள் நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், கடந்த சனிக்கிழமை அன்று, இரவு 11.29 மணிக்கு, தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், புதிதாக பிறந்த 12 குழந்தைகளை வெளியேற்றினார்கள். இதில், 5 குழந்தைகள் உயிர் பிழைத்துள்ளன. மற்ற குழந்தைகள் வேறொரு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகின்றன. ஒட்டுமொத்தமாக, இந்த விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

இந்நிலையில், இந்த தீ விபத்து குறித்து, காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், தீ விபத்து ஏற்பட்ட பிறகு, ஆக்ஸிஜன் சிலிண்டரை வைத்திருந்த கட்டிடமும், வெடித்து சிதறியுள்ளது என்றும், இதன்காரணமாக, அருகில் இருந்த மற்ற கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், தெரியவந்துள்ளது.

மேலும், இந்த தீ விபத்து ஏற்படுவதற்கு, மருத்துவமனை அதிகாரிகளின் அலட்சியமும் காரணம் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தீ அணைப்பான்கள் மற்றும் அவசரகாலத்தில் வெளியேறும் இடம் ஆகியவை, இந்த மருத்துவமனையில் இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்தபோது பணியில் இருந்த மருத்துவர், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தகுதியில்லாதவர் என்றும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, டாக்டர் ஆகாஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, இந்த மருத்துவமனைக்கு, DGHS வழங்கிய உரிமம், கடந்த மார்ச் 31-ஆம் தேதி அன்றே காலாவதியாகிவிட்டது. அப்படியே அந்த உரிமம் காலாவதியாகாவிட்டாலும், 5 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மட்டும் தான், உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், தீ விபத்து ஏற்படும்போது, 12 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in இந்தியா

To Top