“ஏழைகளின் நாயகன்” என பெயர் பெற்ற மருத்துவர் சுகந்தன். ஏழை எளிய மக்களிடம் மிகக் குறைவான கட்டணத்திலும், சில தருணங்களில் இலவசமாகவும் சிகிச்சை அளித்ததால் அவரை மக்கள் இவ்வாறு அழைத்தனர்.
குறிப்பாக ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் மீட்சிக்காகவும், சிகிச்சைக்காகவும், ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளை சுகந்தன் மேற்கொண்டிருந்தார். மேலும் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் , பாஜக மருத்துவர் பிரிவு தலைவராகவும் சுகந்தன் விளங்கினார்.
இந்நிலையில் இன்று காலை 7.15 மணியளவில் மாரடைப்பு காரணமாக மருத்துவர் சுகந்தன் மரணமடைந்ததாக பாஜக மருத்துவ அணியின் மாநிலத் தலைவர் டாக்டர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் சுகந்தன் மறைவுக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.