விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள்..!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சிறுமி இருவருக்கு கையில் 6 விரல் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். சிகிச்சை முடிந்து சிறுமி திரும்பிய போது, பெற்றோருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், கைக்கு பதில், வாயில் பிளாஸ்திரி மூலம் ஒட்டப்பட்டு இருந்தது. சிறுமியை பரிசோதித்த போது, கையில் 6வது விரலும் இருந்துள்ளது.

இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவரிடம் கேட்ட போது விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்ததாக கூறி நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளனர். இதையடுத்து 6வது விரலை அகற்றுவதாக கூறி சிறுமியை மீண்டும் அழைத்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.ஏற்கனவே இதே மருத்துவமனையில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த போது வயிற்றில் கத்திரியை வைத்து தைத்து விட்டதாக அந்த பெண் புகார் கூறியிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News