நெல்லை அரசு மருத்துவமனை தமிழகத்தில் மூன்றாவது மிகப்பெரிய மருத்துவமனையாக திகழ்கிறது.
இதில் நாள்தோறும் 2000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பலரும் இங்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.
இதில் நெல்லை அரசு மருத்துவமனையில் 228-வது வார்டு பகுதியில் நாய்கள் அதிக அளவில் சுற்றுவதாக பொதுமக்களிடமிருந்து புகார் எழுந்துள்ளது.
நோயின் அவஸ்தையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் நாய்கள் உலாவி கொண்டு வருவது பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.
நெல்லை அரசு மருத்துவமனையில் குழந்தைகள், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மருத்துவமனை வளாகங்களில் சுற்றித் திரியக்கூடிய நாய்களை மாநகராட்சி உதவியோடு அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.