உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து லேப்டாப், கணினி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
வெளிநாடு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், பர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் ஃபேக்டர் கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றின் இறக்குமதி தடை செய்யப்படுவதாகவும், உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி சான்று பெற்றிருந்தால் மேற்குறிப்பிடப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ள வெளிநாடு வர்த்தக இயக்குநரகம் பழுதை சரிசெய்ய அனுப்பியவற்றை திரும்ப பெற தடையில்லை என தெரிவித்துள்ளது. இதனால் சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது