Connect with us

Raj News Tamil

ஆபாச நடிகையுடன் உறவு? – அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டெனால்ட் ட்ரம்ப் கைது!

உலகம்

ஆபாச நடிகையுடன் உறவு? – அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டெனால்ட் ட்ரம்ப் கைது!

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்தவர் டெனால்ட் ட்ரம்ப். இவர் தன்னுடன் ரகசிய உறவில் இருந்ததாக, ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்த புகாரை, டெனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக பேசாமல் இருப்பதற்கு, அந்த நடிகைக்கு, ரூ.1.07 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த தொகை ட்ரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில், சட்ட ரீதியிலான செலவு என குறிப்பிடப்பட்டதால் அவர் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை, மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அமெரிக்க சட்ட விதிகளின் படி ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். பின்னர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த டொனால்ட் ட்ரம்ப்பின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை அடுத்த ஆண்டு தொடரும் என்று நீதிமன்றம் கூறியதை அடுத்து, நீதிமன்றத்திலிருந்து ட்ரம்ப் வெளியேறினார். இதனால் அமெரிக்காவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top