திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 80 லட்சம் மதிப்புள்ள இரண்டு மின்சார பேருந்துகள் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக குழும தலைவர் சத்யநாராயணா, துணைவேந்த பேராசிரியர் நாராயண ராவ் ஆகியோர் இன்று திருப்பதி தேவஸ்தானத்திற்கு 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு மின்சார பேருந்துகளை நன்கொடையாக வழங்கினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேருந்துகளுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட பின் அவற்றின் சாவிகள், ஆவணங்கள் ஆகியவற்றை சத்யநாராயணா, நாராயணராவ் ஆகியோர் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி இடம் ஒப்படைத்தனர்.