தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று டிசம்பர் 2 ஆம் தேதி புயலாக உருவாகக்கூடும். தமிழகம் மற்றும் புதுவைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் மிக கனமழையும் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
புயல் முன்னெச்சரிக்கையை தொடர்ந்து, மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.