புர்கா அணியாமல் டாக்சியில் செல்லக்கூடாது…ஆப்கானிஸ்தானில் புதிய உத்தரவு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பெண்கள் குறிப்பிட்ட வகுப்பிற்கு மேல் படிக்கக்கூடாது, பெண்களுக்கான மருத்துவம், பெண்களுக்கான பிற அடிப்படை உரிமைகள் என பல உரிமைகளை தலிபான்கள் பறித்து வருகின்றனர்.

இந்நிலையில் டாக்சியில் செல்லும் பெண்கள் கட்டாயம் முகத்தை மறைக்கும் விதத்தில் புர்கா அணிந்திருக்க வேண்டும் என புதிய உத்தரவு போடப்பட்டுள்ளது. அவ்வாறு அணியாமல் செல்லும் பெண்களை டாக்சியில் ஓட்டுநர்கள் ஏற்றக்கூடாது என்றும், அவ்வாறு அவர்களை டாக்சியில் ஏற்றினால் அந்த ஓட்டுனர்கள் தண்டிக்கப்படுவார்கள் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News