அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் அடுத்த பிச்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி இவரது மகன் குமரன் (17) இவர் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
திருப்பத்தூரில் சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பிச்சனூர் ஏரி நிரம்பியுள்ள நிலையில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையின் காரணமாக ஏரியை பார்க்கச் குமரன் சென்றபோது அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் மின் கம்பி அறுந்து விழுந்துள்ளதை அறியாமல் மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனை அறிந்த குருசிலாப்பட்டு போலிசார் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக குரிசலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.