பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது – உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 136 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜக படுதோல்வியை சந்தித்து. மதசார்பற்ற ஜனதா தளமும் தோல்வியை சந்தித்தது.

தென் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் மட்டுமே பாஜக ஆட்சியில் இருந்து வந்தது. எனவே இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரமாக களம் இறங்கியது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதை நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக. இஸ்லாமியர்களின் வாக்கு வேண்டாம், இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து உள்ளிட்ட அம்சங்கள் பாஜகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

கர்நாடக தேர்தல் தோல்வியால் பாஜக இல்லாத தென்னிந்தியா உருவாகியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எனது வாழ்த்துகள். சர்வாதிகாரம் – மதவாதம் – மக்களைச் சுரண்டும் ஊழல் என்றிருந்த பாஜகவை வீழ்த்திய கர்நாடக மக்களின் முடிவு, வரவிருக்கிற மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகும். பாசிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தெற்கிலிருந்து தொடங்கியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News