ஓ மை கடவுளே என்ற வெற்றிப் படத்திற்கு பிறகு, அஸ்வத் மாரிமுத்துவும், லவ் டுடே என்ற வெற்றிப் படத்திற்கு பிறகு, பிரதீப் ரங்கநாதனும் இணைந்துள்ள திரைப்படம் டிராகன்.
கடந்த 21-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
குறிப்பாக, இளைஞர்களும், குடும்ப ரசிகர்களும், மிகுந்த ஆதரவை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் தற்போது தெரியவந்துள்ளது.
அதன்படி, 9 நாட்களில், உலகம் முழுவதும், இப்படம் 94 கோடி ரூபாயை, இப்படம் வசூலித்துள்ளதாம். இதனால், படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டிராகன் திரைப்படம், 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.