அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிராகன்.
வாழ்க்கையில் ஏமாற்றி முன்னேறக் கூடாது என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் என்னவென்று தற்போது தெரியவந்துள்ளது.
அதன்படி, உலகம் முழுவதும், 10 நாட்களில், இந்த திரைப்படம் 105 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாம். வரும் நாட்களில், படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படமான லவ் டுடேவும், 100 கோடி ரூபாய் என்ற இமாலய வசூல் சாதனையை நிகழ்த்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.