மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஓராண்டிற்குள் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்படும்

மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்னும் ஓராண்டிற்குள் குடிநீர் தட்டுப்பாடு முழுமையாக நீக்கப்படும் என ஒன்றிய குழு தலைவர் பரணி கார்த்திகேயன் பேட்டி அளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுகான சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பரணிகார்த்திகேயன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கான தேவையை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முன்வைத்தனர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் கூறுகையில், மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். கோரிக்கையின்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பரிந்துரை செய்துள்ளார்கள்.

பெருமருதூர் வெள்ளாற்றுலிருந்து மும்பாலை வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க பணிகள் தொடங்கி நடை பெற்றுவருகிறது என்றும், ஒரே நேரத்தில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள் அனைத்திற்கும் தண்ணீர் முழுமையாக கிடைக்கும் என தெரிவித்தார்.

மேலும் இப்பகுதியில் இந்தாண்டு சரியான பருவமழை பெய்யாததால் விவசாயம் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இதனை கணக்கெடுத்து துறை அதிகாரிகள் மூலம் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.