ஹாலிவுட்டில் வெளியாகும் திரைப்படங்களை பார்த்து தான், இந்திய இயக்குநர்கள் பலர் தங்களது படங்களை எடுக்கின்றனர். இதற்கு இன்ஸ்பிரேஷன் என்ற பெயரையும் வைத்துக் கொள்கின்றனர்.
ஆனால், தற்போது, இந்தியாவில் உருவான திரைப்படம் ஒன்றை, ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய உள்ளார்கள்.
அதாவது, மீனா, மோகன்லால் ஆகியோர் நடித்திருந்த த்ரிஷ்யம் திரைப்படம், ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளதாம். இந்த தகவல், பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தமிழில், பாபநாசம் என்ற பெயரிலும், மற்ற மொழிகள் அனைத்திலும், த்ரிஷ்யம் என்ற பெயரிலும் எடுக்கப்பட்ட இப்படம், வெறும் 5 கோடி ரூபாயில் உருவாகி, 75 கோடி வரை வசூலித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.