போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.
ரூ. 2 ஆயிரம் கோடி போதைப் பொருள்களை பல்வேறு வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் திமுக பிரமுகருமான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இன்று காலை கைது செய்தனர்.