தாம்பரம் அருகே அதீத மது போதையில் விலையுர்ந்த இருசக்கர வாகனத்தில் விபத்தை ஏற்படுத்தி தப்ப முயன்ற இளைஞரை பொதுமக்களே பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையம் அழைத்து செல்லும் செல்போன் காட்சிகள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு தாம்பரம், அகரம்தென் பிராதான சாலை திருவஞ்சேரி அருகே ஒரு வழி பாதையில் விலையுர்ந்த இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது சாலையை கடக்க முயன்ற மற்றொரு இருசக்கர வாகனத்தில் அந்த இளைஞரின் வாகனம் மோதியதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்துள்ளனர்.
இதில் தம்பதியரில் இருசக்கர வாகனத்தில் பின்னல் உட்கார்ந்திருந்த பெண்ணிற்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக அப்பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய இளைஞர் தப்பி செல்ல முயன்ற போது மடக்கி பிடித்த பொதுமக்கள் அந்த இளைஞர் தன்னிலை மறந்து அதீத போதையில் இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து அந்த இளைஞரை பொதுமக்கள் விசாரனை செய்த போது அந்த இளைஞர் மாடம்பாக்கம் அடுத்த பத்மாவதி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது. பிறகு போலீசாரிடம் தொடர்பு கொண்ட போது “அண்ணா போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டாம் என்னை மண்ணித்து விடுங்கள்” என்று தள்ளாடியபடி பேசியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து தங்களின் இருசக்கர வாகனத்தில் போதை இளைஞரை பாதுகாப்பாக அமர வைத்து சேலையூர் காவல் நிலையத்திற்க்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.