பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள போகரா கிராமத்தை சேர்ந்தவர் முன்னிலால் ராம். இவர், மதுவகையான கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த உஜ்ஜிவால் குமார், கள் கடைக்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கும், முன்னிலாலுக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், தனது கடன் பாக்கியான 80 ரூபாயை வழங்கும்படி, முன்னிலால் கூறியுள்ளார். இதனைக் கேட்டு கடும் ஆத்திரம் அடைந்த பாதுகாப்பு படை வீரர், தன் கையில் இருந்த துப்பாக்கியின் மூலம், முன்னிலாலை சுட்டுத்தள்ளினார்.
இதில், படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஜவானை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.