தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு செல்லும் அரசுப்பேருந்தை ஓட்டுநர் குடிபோதையில் தாறுமாறாக பேருந்தை இயக்கியுள்ளார். இதனால் அச்சமடைந்த பயணிகள் கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தினர்.
இதையடுத்து பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பேருந்தில் பயணித்த அனைத்து பயணிகளும் மாற்று பேருந்தில் ஏற்றப்பட்டு மதுரைக்கு அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.