குடிபோதையில் 2 வயது குழந்தையை அடித்தே கொன்ற தந்தை – உ.பி யில் அதிர்ச்சி

உத்தரப்பிரேசம் மாநிலத்தில் மதுபோதையில் 2 வயது குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்ரஃப் என்பவருக்கும், சைஸ்தா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான அஷ்ரஃப் குடிபோதையில் அடிக்கடி தனது மனைவியையும் குழந்தையையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் தம்பதியினருக்கு இடையே உணவு தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அஷ்ரப் என்ற நபர் தனது மனைவி மற்றும் 2 மகள்களை அடிக்கத் தொடங்கினார்.2 வயதே ஆன குழந்தையை தரையில் பலமுறை அடித்துள்ளார். இதில் அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. மற்றொரு 3 வயது குழந்தை மருத்துவமனையில் தனது தாயுடன் உயிருக்கு போராடி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அஷ்ரஃபை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News