மணமகளுக்கு போட வேண்டிய மாலையை.., மணமகன் செய்த செயல்.. கலவரமான திருமண வீடு..

திருமணம் தொடர்பான வீடியோக்கள், அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது வழக்கம். அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் கியோல்டியா பகுதியில் நடந்ததாக கூறப்படும் திருமணத்தில், பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, திருமண நிகழ்வுக்கு, பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும், கலந்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு குடிபோதையில் வந்த மணமகன், மணமகளுக்கு போட வேண்டிய மாலையை, அருகில் இருந்த நண்பருக்கு போட்டுள்ளார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, மணப்பெண் அந்த திருமணத்தை தடாலடியாக நிறுத்தியுள்ளார். பெண் வீட்டார் எவ்வளவு வற்புறுத்தியும், அந்த பெண் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. மேலும், மணமகனின் வீட்டார் மீது காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News