டு பிளசிஸ் உடலில் இருந்த டேட்டூ என்ன? இவ்வளவு அர்த்தம் இருக்கா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணிக்கும் இடையே, கடந்த வாரம் ஐ.பி.எல் லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய சென்னை அணி, அதிரடியாக விளையாடி 226 ரன்கள் எடுத்தது. இதற்கு அடுத்தாக களமிறங்கிய RCB அணி, ஆரம்பத்திலேயே 2 விக்கெட்களை கொடுத்து, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

ஆனால், அதற்கு அடுத்து விளையாடிய மேக்ஸ்வெல்லும், டூ பிளசிஸ்-ம் சிக்ஸர்களை பொளந்து, அணியை முன்னோக்கி கொண்டு சென்றனர். இந்த ஆட்டத்தின்போது, டூ பிளசிஸ் உடலில் ஏற்பட்ட காயத்திற்காக, கட்டு போடப்பட்டது. அப்போது, அவரது ஜெர்ஸியை தூக்கினார்.

அந்த நேரத்தில், டு பிளசிஸ் உடலில் இருந்த டேட்டூவை ரசிகர்கள் பலரும் கண்டனர். அரபு மொழியில் எழுதப்பட்டிருந்த இந்த டேட்டூக்கு என்ன அர்த்தம் என்று பலரும் இணையத்தில் தேடி வந்தனர்.

ஒரு வழியாக, அதன் அர்த்தத்தை ரசிகர்கள் கண்டு பிடித்துள்ளனர். அதாவது, பசல் என்ற அரபு மொழியில் எழுதப்பட்டுள்ளதாம். பசல் என்பதற்கு, கருணை என்பது தான் அர்த்தமாம். இவ்வாறு அர்த்தமுள்ள பல்வேறு டேட்டூக்களை அவர் உடல் முழுவதும் குத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News