துபாயின் பட்டத்து இளவரசராக இருப்பவர் ஷேக் ஹம்டன். இவர், 2 நாள் அரசு முறை பயணமாக, இந்தியா வர இருப்பதாக, சமீபத்தில் கூறப்பட்டது.
அதன்படி, இன்று இந்தியா வந்த ஷேக் ஹம்டன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், பிரதமர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-
“துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்டனை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இந்தியா – ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டணியின் முன்னேற்றத்தில், துபாய் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இளவரசரின் இந்த வருகை, இரு நாட்டுக்கும் இடையேயான ஆழமான நட்பை, மீண்டும் உறுதிப்படுத்துகிறது. மேலும், எதிர்காலத்தில் ஏற்பட உள்ள மிகவும் வலிமையான கூட்டுச் செயல்பாட்டுக்கு, இந்த சந்திப்பு வழியை அமைத்துக் கொடுக்கிறது”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.