தொடர் மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. பாசனத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டிருப்பதாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் நீர்வரத்தாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60.07 அடியில் இருந்து 60.41 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 3,297 கன அடியில் இருந்து 3,320 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் தற்போது 24.99 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
குடிநீர் தேவைக்காக மட்டும் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.