திருவள்ளூர் மாவட்டம திருத்தணி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது பிரியர் பீர் வாங்கியுள்ளார். அந்த பீரில் தூசி, கழிவு கலந்து இருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விற்பனையாளரிடம் கேட்ட போது “சரக்கு விற்பனை செய்வது மட்டுமே எங்கள் வேலை, அதில் என்ன கலந்துள்ளது என்று ஆராய்ச்சி செய்து விற்பனை செய்ய முடியாது” என பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர் தூசி, கழிவு நிறைந்த பீர் பாட்டிலை வீடியோ எடுத்து சமூக வளைதளத்தில் பரப்பியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பீர் பாட்டிலில் தூசி, கழிவுகள் இருந்ததால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!! – வைரல் வீடியோ pic.twitter.com/B24zTVfWIv
— Raj News Tamil (@rajnewstamil) June 28, 2023