ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 4.3 மற்றும் 6.3-க்கு இடைப்பட்ட அளவுகளில் தொடர்ச்சியாக 8 முறை நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன.
தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நகரில் பல பகுதிகளில் கட்டடங்கள் இடிந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தலிபான் அரசு அறிவித்துள்ளது. 12 கிராமங்கள் முற்றிலும் பேரழிவை சந்தித்துள்ளது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.