சீனாவின் கான்சு மாகாணத்தில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு 10 கி.மீ., ஆழத்தில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது.
கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனா பாதிப்பை சந்தித்துள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 127 பேர் பலியாலியாகினர்.
இந்நிலையில் பலி எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.