டெல்லி, பீகாரில் நிலநடுக்கம்!

இயற்கை பேரிடர்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது நிலநடுக்கம். இந்த பேரிடர் ஏற்பட்டால், நிலத்தில் அதிர்வு ஏற்பட்டு, கட்டிடங்கள் உடைந்து சரிந்து விழும் அபாயம் உள்ளது. பெரும்பாலும் அதிகப்படியான நிலநடுக்கங்கள், கடலுக்கடியிலேயே ஏற்பட்டுவிடுவதால், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுவதில்லை.

ஆனால், தற்போது தலைநகர் டெல்லியிலும், பீகார் மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியை பொறுத்தவரை, காலை 5.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. தூங்கிக் கொண்டிருந்தபோது, நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள், தங்களது வீடுகளில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர்.

இதேபோல், பீகாரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும், இங்கும் 4.0 என்ற ரிக்டர் அளவில் தான், நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News