இமாச்சலப்பிரதேசத்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு

இமாச்சலப்பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் இன்று மதியம் 1.16 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 9 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக சம்பா மாவட்டத்தில் சில இடங்களில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News