ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,
ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 8.36 மணிக்கு 129 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது அட்சரேகை 73.32 ஆகவும், தீர்க்கரேகை 184 ஆகவும் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 4.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.