லடாக்கில் இன்று மாலை 3.48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.
இதே போல ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் மாலை 4 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளிவரவில்லை.