துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000-த்தை தாண்டிவிட்டது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து பெருந்துயரத்தில் சிக்கி உள்ளனர்.
இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் நிலநடுக்கம் உணரப்பட்டு வருவதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.
இந்நிலையில் இன்று இந்தியாவில் மேகாலயா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. மேகாலயா மாநிலத்தின் துரா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.0 ஆகவும் மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.6 ஆகவும் பதிவாகி உள்ளது.
மேகாலயா மாநிலமானது வங்கதேச எல்லையில் அமைந்துள்ளது. இதன் காரணமாக வங்கதேச எல்லைப் பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேகாலயா மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் பொதுமக்ளை அச்சப்படவைத்துள்ளது.