நிலநடுக்கம் ஏற்படுவதை கண்டறிவதற்கும், மக்களை தயார் நிலையில் வைத்திருப்பதற்கும், நிலநடுக்கவியல் பயன்படுகிறது.
இந்தியாவில் இந்த துறை, தேசிய நிலநடுக்கவியல் மையம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மையம், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள டோடா என்ற பகுதியில், 3.9 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், காலை 9.34 மணிக்கு, நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.