துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் குஜராத் உள்பட 8 இந்திய மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
குஜராத், பீகார், அசாம், இமாச்சலப்பிரதேசம், சிக்கிம், நாகலாந்து, மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் ஆகிய 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
டெல்லி, என்சிஆர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நிலநடுக்க ஆபத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.