தேன்கனிக்கோட்டை அருகே, மின்மாற்றியில் உள்ள செம்பு மின் கம்பிகள் தொடர்ந்து திருடப்படுவதாக, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள பல்வேறு இடங்களில், மின்சார பயன்பாட்டிற்காக மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றிகளில், செம்பால் செய்யப்பட்ட ஓயர்கள் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
இந்த ஓயர்களுக்கு, பழைய இரும்புக் கடைகளில் அதிக விலை கொடுப்பதால், அதனை சிலர் திருடி, விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 5 மின்மாற்றிகளில் இருந்து, செம்பு ஒயர்கள் திருடப்பட்டுள்ளன.
இதனை கண்டறிந்த மின்வாரிய ஊழியர்கள், தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், செம்பு ஒயர் திருடும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.