அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ED ரெய்டு!

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களிலும், சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சியில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டிலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த தகவலை அறிந்த அவரது ஆதரவாளர்கள், கே.என்.நேருவின் வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர். சோதனை அனைத்தும் முடிந்த பிறகே, வீட்டில் இருந்து ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? என்ற தகவல் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News