QR Code மோசடி, பகுதி நேர வேலை தருவதாக கூறி மோசடி என்று பல்வேறு சைபர் குற்றங்களின் மூலமாக, பலகோடி பணம் ஏமாற்றப்பட்டுள்ளது. இந்த பணங்கள், Mule Accounts எனப்படும் போலி வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
பின்னர், இந்த பணம், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த Pyypl என்ற பணப்பரிவர்த்தனை செய்யும் செயலியின் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பின்னர், இந்த செயலியில் இருந்து, கிரிப்டோகரன்சிகள் வாங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பண சலவையில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறையினர், தென்மேற்கு டெல்லியின் பிஜ்வாசன் பகுதியில், இன்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, வழக்கில் தொடர்புடைய அசோக் சர்மாவும், அவரது சகோதரரும், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த அதிகாரிகள், முதலுதவி பெற்ற பிறகு, சோதனையில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது. அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.