சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிறகு, எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், உழைக்காமல் பொய் மட்டுமே பேசி பதவிக்கு வந்தவர் தான் அண்ணாமலை என்று விமர்சித்தார். மேலும், மற்ற கட்சிகளின் அடையாளத்தில் வெற்றி பெற்றுவிட்டு, ஆடுபவர்கள் தான் பாஜகவினர் என்றும் விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மேலவையில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற அதிமுக தேவைப்பட்டது என்றும், ஆனால், அவர்களுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதால், அதிமுக கெட்டதாக தெரிகிறதா என்றும், கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில், அண்ணாமலை சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எடப்பாடி பழனிச்சாமி தற்போது பேட்டி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.