தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவரது சொந்த ஊரான எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் பொங்கல் விழா கொண்டாடுவதற்காக சென்றார்.
அப்போது திடீரென எடப்பாடி பழனிசாமியின் உறவினர் உயிரிழந்ததாக தகவல் வந்தது. உடனே பொங்கல் விழாவை கொண்டாடாமல் அங்கிருந்த ஒரு பத்திரிக்கையாளரின் இரு சக்கர வாகனத்தை வாங்கி கிளம்பினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.